இந்நாட்டில் எது நிழல்தாலும் மற்றவருக்கு நல்லதாகவும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஒன்றே பயனாக அமைவது வேதனையை தருகிறது.
இப்பொழுது புவா பாலா கிராம பிரச்னையை உன்னித்து கவனித்தால் யார் செய்த குற்றம் என்பதனை தெள்ள தெளிவாக சொல்ல இயலும். ஆனால் அதனை சுட்டி காட்டி நழுவுவதும் மறுபுறம் அதனை கண்டும் காணாததுபோல் இருப்பதும் ஒரு சிலரின் பொறுப்பற்ற கொள்கையாகிவிட்டது.
உதவி புரிந்தவர்களை எட்டி உதைப்பதும் அவர்களை உதாசினப்படுத்துவதும் பல இரக்கமற்ற மனிதர்களின் செயலாகி விட்டது. அன்று இந்நாட்டில் அரசியல் மறுமலர்ச்சியை தொற்றுவித்தவர்கள் இந்தியர்கள்தான். அதன் வாயிலாக பல சமுதாய உள்ளம் கொண்ட சிலர் பல இன்னல்களையும் ஐந்து தலைவர்கள் சிறை வாசத்தையும் அனுபவித்தார்கள்.
இவர்களின் தியாக உணர்வை ஒரு பொழுதும் யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் பிறர் அதனை குறைத்து மதிப்பிடும் அளவிற்கு நடக்காமல் இருப்பது சமுதாய உணர்வுள்ள தியாகிகளுக்கு நல்லதாகும்.
இப்பிரச்சனையில் ஒருவருக்கொருவர் குறைகூறி சூழ்நிலையை மோசமடைய செய்தலை தவிர்த்து குறையை தீர்க்கும் ஒரு வலுவான கருத்தை தெரிவிக்க முயல செய்வது அனைவருக்கும் மற்றும் அனைத்திற்கும் நல்ல முடிவை தரும்.
அன்று மக்களின் உரிமையை உதாசினப்படுத்திய ம.இ.க இன்று நல்லவர்களை போல் இந்த விஷயத்தில் நாடகம் ஆட கூடாது. அன்று இந்நில விவகாரத்தில் நடுவில் நின்றுக்கொண்டு சுயலாபத்திற்கு கும்மாளம் அடித்தவர்கள் ம.இ.கவை சேர்ந்தவர்கள் என்று மறந்துவிடக்கூடாது.
எது எப்படி இருப்பினும், தற்பொழுது இருக்கும் பினாங்கு மாநில அரசாகத்தில் இந்தியர்களின் தலை கவசமாக திகழும் பேராசிரியர் ராமசாமி அவர்களை உதாசினப்படுத்தி ஓரங்கட்டி நாம் பகைமையை உருவாக்கிகொல்வதை விட, அவருடன் துணை நின்று இப்பிரச்சனையை தீர்க்க முயலவேண்டும்.
சுகுமாரன் பெரியசாமி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment