Saturday, August 15, 2009

மக்களும் முட்டாள் அரசியல்வாதிகளும்

"ஒரு புத்திசாலி மக்கள் எப்படி இருக்கவேண்டும்?" நல்ல கேள்வி.....இப்ப சொல்லி ஒரு லாபமும் இல்லை இருந்தாலும் பிற்காலத்திற்கு பயன்படும்..... அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு மனிதன் ஒரு பொருளை தனது வீட்டிற்கோ அல்லது பயன்பாட்டிற்க்கோ வாங்கும்பொழுது அதன் தரம், தராதரம், தன்மை போன்ற பல கேள்விகளை கேட்டு அதனை முழுமையாக அறிந்த பின்னர் தான் அப்பொருளை வாங்குவான்.

ஆனால் 5 வருடத்திற்கு ஒரு முறை வரும் தேர்தலில் மட்டும் தனது வாக்குரிமையை அடுத்தவன் சொல்லித்தான் போடுகிறான். எதனாலே இந்த குழப்பம்? இலவசமா ஓட்டு போடுகிறோம் என்ற எண்ணத்தில் ஏற்படுகிற கோளாறுதான் காரணமா?

சரி இனி ஓட்டு போடுகிறவர்கள், உங்கள் ஓட்டு என்ன விலை போகும் என்று முடிவெடுத்து, பணத்தை சம்பத்தப்பட்ட வேட்பாளரிடம் கொடுத்து வாக்களியுங்கள். உங்களின் பணத்திற்கு அந்த வேட்பாளர் தகுதியானவரா, தரமானவர, தன்னலம் கருதாமல் சேவை செய்ய கூடியவரா என்று ஆராய்ந்து வாக்களியுங்கள்.

இது சொல்வதற்கு சுலபம், மேலும் கேலி பண்ணும் அளவிற்கு உள்ளது போல் தான் தெரியும், ஆனால் இதுதான் உண்மை. காரணம் ஒரு சில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் தங்களுக்கென்று ஒரு ஆசையை வரைந்து வைப்பார்கள். அதன் தகுதியை அடையும் வரை உங்களை விடமாட்டார்கள், அடைந்தவுடன் உங்களை காலால் உதைத்து விடுவார்கள்.

ஆகவே, இது போன்ற ஒரு சில படித்த முட்டாள் அறியசல்வாதிகளுக்கு நாம் சொல்வதை அவர்கள் செய்யவேண்டும் என்றால், இதுதான் ஒரு சிறந்த வழி. இல்லையேல் நம்மை அடிமையாக்கி, நமது துன்பத்தையும் துயரத்தையும் கண்டு இரக்கமில்லா சுயநல அரசியல் நரிகள் நம்மை மெய்துவிடும்.

மக்களாகிய நாம் முட்டாள்கள் அல்ல, ஆனால் நம்மை முட்டாளாக்கி அரசியல் லாபம் மற்றும் அதில் வரும் பணத்தை கொண்டு சல்லாபம் அடிக்க நினைக்கும் அரசியல்வாதிகளை நாம் முட்டாலாக்கவேண்டும். அதற்க்கு ஒரே வழி இனி அவர்களை நாம் சென்று சந்திக்கக்கூடாது அவர்கள் நம்மை வந்து சந்திக்கட்டும்.

ஆதரவு பிச்சை கேட்டு வீடு வீடாக வந்த இவர்கள், இன்று ஏன் மக்களை சந்திக்க வருவதில்லை என்றால், நான் ரொம்ப பிசி.....அதுமட்டும் இல்லாமல் நான் 100 நாட்கள் பாராளுமன்றத்தில் நிறை மக்களுக்காக பேச வேண்டிகிருக்கிறது அதனால் உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் எனது அலுவலகத்தில் முறையிடுங்கள் என்பது.

இன்னும் இந்த அரசியல் கபட நாடகம் எத்தனை நாட்களுக்குத்தான் தொடர்கிறது என்று பார்ப்போம்.

மீண்டும் பிச்சை கேட்கும் நேரம் தூரமில்லை, அருங்கில்தான் உள்ளது என்பதனை மக்கள் மறந்துவிடக்கூடாது.

Thursday, August 13, 2009

தமிழ்மொழியை புறக்கணித்தால், அவர்களை நாம் புறக்கணிப்போம் !!!!!

ஒரு இனத்தை ஓரங்கட்ட முடிவெடுத்தால் முதலில் அதன் மொழியை ஒழிக்கவேண்டும் என்பதனை இந்நாட்டு பிரதமரும் அவர்தம் துணைவியாரும் நன்றாகவே புரிந்துள்ளனர்.

மும்மொழி கலாசாரம் என்பது என்ன? அது இந்நாட்டில் தோற்றம் கண்டதா? அப்படி இருந்திருந்ததால் எதற்கு தமிழ்மொழிக்கு இவ்வளவு சோதனைகள்? இது மொழிக்கு விழும் அடியா அல்லது இந்நாட்டு இந்தியர்களின் முதுகில் விழும் சாட்டை அடியா?




Tuesday, August 11, 2009

இனியும் ம.இ.கா தேசிய முன்னணியில் இருந்து என்ன லாபம்?

சமீபகாலமாக மக்கள் கூட்டணியில் தொடர்கதையாக நிகழ்ந்து வரும் அனைத்து பிரச்சனைகளுமே ஒரு நல்ல தீர்வுக்கு அடித்தளம் என்பதனை அனைவரும் மறந்துவிடக்கூடாது.

தேசிய முன்னணி இல்லாத பல குற்றங்களை மக்கள் கூட்டணி அரசாங்கத்தின்மேல் வீணாக பாய்ச்ச முயன்றுவருகிறது என்ற உண்மை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இவர்களின் கனவு கனவாகவே தான் இருக்குமே ஒலிய அது ஒரு பொழுதும் நினைவாகாது.

எந்த ஒரு திட்டமும் மக்கள் முழுமையாக பயன் பெற வேண்டும் என்பதே மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் கொள்கை. அதனால் தான் முள்வேலியில் சிறைப்பட்டு வாழ்ந்த வாழ்க்கை போதும் இனியும் அது தொடர இடம் அளிக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு இந்தியர்கள் மக்கள் கூட்டணி மீது அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான அரசாங்கத்தை தேர்வு செய்தார்கள்.

அவர்களின் தேர்வு ஒருபொழுதும் தவறாகாமல் இருக்க மக்கள் கூட்டணி பல இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளை ஆங்காங்கே தங்க சமயத்தில் குரல் எழுப்புகின்றனர்.

இன்றைய காலம் வரை இந்திய சமுதாயத்திற்கு கிடைக்கவேண்டிய அனைத்து சலுகைகளுமே சுருதி குறைந்த பாணியில் இருந்தது. தைரியத்துடன் கேட்க வேண்டிய அனைத்து உரிமைகளும் கெஞ்சி கேட்கும் அளவிற்கு தரம் குறைந்து விட்டது. இவை அனைத்துக்குமே காரணம் ம.இ.கா தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

சொந்த அரசியல் லாபத்திற்கு இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியை அடமானம் வைத்த கட்சி ம.இ.கா, தேசிய முன்னணியின் தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடியவர்கள் இவர்கள். இன்று புரட்சி வசனம் பேசி மக்களை மீண்டும் பாதாளத்திற்கு தள்ள முயல்கிறார்கள்.

தேசிய முன்னணியில் நடக்கும் அனைத்து தவறுகளையும் தைரியத்துடன் விமர்சிக்க கூடவில்லை என்றால், உள்ளே நடக்கிற அனைத்து உண்மைகளை இந்திய மக்களுக்கு எப்படி எடுத்து சொல்ல முடியும். மறைக்கப்படும் உண்மைகள் பேசப்படும் பொய்களை விட பெரும் கேடு விளைவிக்காதா என்ற உண்மை அறிந்தும் தெரியாமல் இருந்தவர்கள் நீங்கள். இன்று இந்திய சமுதாயத்தை பல வித குறுக்கு வழியில் பேரம் பேசி ஏமாற்ற பார்க்கிறீர்களா?

ம.இ.கா ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும், அதாவது பல ஆயிரம் மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியபோது, திரைமறைவில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் நீங்கள். இனியும் உங்கள் ஜம்பம் இங்கு பலிக்காது.

ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியை கண்ட பொழுது மக்களின் முன்னேற்றத்தில் மண்ணைவாரி இரைத்த நீங்கள் இனியும் தேசிய முன்னணியில் கூட்டணி வகிப்பது என்ன நியாயம்? தேவையா இந்த கூட்டணி.

கெஞ்சி கேட்டு சமாதானமாக சென்றால் இந்நாட்டில் நாம் அடிமைகளாக தான் இருக்க முடியுமே ஒலிய தலை நிமிர்ந்து நடக்க எந்த சாத்தியமுமில்லை.

அடிமை மனப்பான்மை குணத்தை விலக்கி மானமுள்ள இந்திய இனம் இந்த மண்ணில் வாழ முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு ஒப்பாரி புலம்பல் தேவை இல்லை என்பதனை அறிய சாதனை தலைவர் சிந்திக்கவேண்டும்.

இனியும் அம்னோ போன்ற அரசியல் முதலைகளிடம் நமது உரிமைக்காக கண்ணீர் விடுவதை விட்டு விடுங்கள். இந்த இந்திய சமுதாயத்தின் புதிய வாழ்க்கை களம் காத்துக்கொண்டிருக்கிறது. அதனை மக்கள் கூட்டணி இந்திய தலைவர்கள் மட்டுமே உருவாக்கிகொடுக்க முடியுமே ஒலிய வேர எந்த கட்சியினாலும் முடியாது.

இந்நாட்டில் இந்திய மக்களின் பிரச்சனை அழுதால் சாதிக்கமுடியாது, அடித்தால் மட்டுமே வெற்றி உறுதி என்பதனை நினைவில்கொள்ளவும்.

அது மக்கள் கூட்டணியில் சாத்தியம் !!!!!

Sunday, August 9, 2009

உண்டா நேர்மை அரசியலில்? சொல்லுங்கள்

நம் நாட்டில் எல்லாம் உண்டு. இந்தியனுக்கு உண்டு என்பது மட்டும் தான் உண்டு. என்ன உண்டு என்பதை உன்னித்து பார்த்தால் உள்ளது விளங்கும்.

ஒரு சில குடும்பங்களில் பஞ்சம் என்பது இன்னும் உண்டு. அதனை பெரிது படுத்தாமல் கல்வியில் முன்னேறும் மாணவர்களும் உண்டு.

இதையெல்லாம் மீறி இப்பொழுது நமக்கு நிறைய கட்சிகள் உண்டு ஆனால் நேர்மையான அரசியல்வாதிகள் உண்டா? இல்லை. நமக்கு காமராஜ் போல தலைவர்கள் தேவையில்லை, மாறாக மக்கள் நலன் காக்கும் தலைவன் போதும்.

இன்றைய நாள் வரை, நமது உறவுகள் ஆரம்ப பள்ளிகளில் இன்னமும் 50 காசுக்கு மெல்ல கொண்டு போவதில்லை. ஆனால் பல அரசியல்வாதிகள் தமது அலுவலக செலவுகளை கவனிப்பதற்கு, பெரிய அளவில் விருந்து உபசரிப்பு செய்து, அதில் வரும் லாபத்தில் கும்மாளம் போடுகிறார்கள்.

தேர்தல் களத்தில் இறங்கும் முன் ஒரு பேச்சு, இறங்கிய பிறகு ஒரு பேச்சு அதன் பிறகு வெற்றி கண்டவுடன் எல்லாம் மறந்து போச்சு? நேர்மையான அரசியல் வாதிகள் மலேசியாவில் இருக்கிறார்களா? இருக்கிறார்கள் !!!!!!! அனால் அவர்கள் தமிழர்கள் கிடையாது.

இருந்தார்களா? என்று கேட்டால்... பதில்...... இருந்தார்கள் ஆனால் இப்பொழுது அவர்கள் கிடையாது. இந்த நேர்மையானவர்களின் அரசியல் சுவடிகளை படித்தவர்கள் யாரும் இல்லையா? இருக்கிறார்கள்... ஆனால் சுயநலவாதிகளாக உள்ளனர்.

தற்பொழுது இருக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் தமது பெயர் சரித்திரத்தில் இடம் பெற நிறைய பாடுபடுகிறார்கள். இவர்களின் உண்மை குணம் வெளிச்சத்துக்கு வந்தால் இவர்களின் சரித்திரம்.... தர்தரியம் நிரம்பி விடும்.

ஒரு சில நேரங்களில் இந்த வீணாப்போன அரசியல்வாதிகளை சொல்லி எந்த புண்ணியமும் இல்லை காரணம், மக்களுக்கு யாரை தேர்தெடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் போய் விட்டது.

ஆனால் ஒன்று, அந்த விழிப்புணர்வு மட்டும் நம் மக்களுக்கு இருந்தால், இந்த சுய நல அரசியல்வாதிகளின் கதி அதோகதிதான்.

அட இதாவது ஒரு வழியில் பருவாயில்லை, பல துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்களும் நிபுணர்களும், ஒரு சில அரசியல்வாதி கூட சேர்ந்துக்கிட்டு அடிகிற ஜால்ரா இருக்கே....அடேங்கப்பா தாங்க முடியில.

ஆனால் பேச்சுக்கு பேச்சு நான் உணர்வாளன், யார் உணவிலும் மண்ணைவாரி போட மாட்டேன் என்கிற பேச்சு சற்று மக்களை சிந்திக்க வைக்கிறது.

இப்ப என்ன நடக்குது, வீதிக்கு வீதி பொய் பேச்சு. ஒரு தாய் மக்கள் இன்று ஒருவர் தலையில் ஒருவர் மண்ணைவாரி போடும் நிலை. கேவலமாக உள்ளது இந்த நிலையில்லா மனிதர்களை பார்கும் பொழுது.

எப்பொழுதுதான் மாறும் இந்த அவல நிலை? இதை படிப்பவர்கள் சொல்லட்டும் பதில்....

எதற்கு பெரிய உருவப்படம்

பத்து கேவ்ஸ் முருகனை விட பெரிய ஆளு, நம்ம ஆளு நடராஜா.
ஒரே மலேசியா கொள்கையை மனதார ஏற்று....கொள்கைவாதியான நஜிப்பை தாங்கி இன்னும் எவ்வளவு சொரண்ட இந்த சதி நாச வேலையோ...?

தேவைதானா இந்த சர்ச்சைக்கு உட்பட்ட கட் அவுட்?.........அதுவும் இவ்வளவு உயருத்துக்கா, யாரு குடி கேடபோதோ...

தமிழன் ஒரு சில நேரத்துல எல்லாத்தையும் சரியா செய்வான்....தலைகனம் வந்தாச்சுனா தலைகால் தெரியாம ஆடுவான் என்று சொல்வதற்கு இது ஒரு உதாரணம்.

அன்றைய நாள் முருகன் சிலை மிக கம்பிரமாக தோற்றம் கண்ட பொது எத்தனை சர்ச்சைகள் உருவாக்கினார்கள். எதிரே உள்ள சாலையில், இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்பொழுது தீடீர் பயம் தரும் அளவிற்கு உயரமாக இருக்கிறது என்றார்கள்...எம்பெருமான் முருகனை பார்த்து...இன்று பருவாயில்லையா... இல்ல பயம் வரலையா...

இந்த ராட்சச உருவப்படத்தை பார்த்தால்தானே பயம் வர வேண்டும் மக்களுக்கு, என்ன சொல்லுறது விளங்குதா. (நினைவுள்ளதா மங்கோலியா அழகி)