Saturday, August 15, 2009

மக்களும் முட்டாள் அரசியல்வாதிகளும்

"ஒரு புத்திசாலி மக்கள் எப்படி இருக்கவேண்டும்?" நல்ல கேள்வி.....இப்ப சொல்லி ஒரு லாபமும் இல்லை இருந்தாலும் பிற்காலத்திற்கு பயன்படும்..... அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு மனிதன் ஒரு பொருளை தனது வீட்டிற்கோ அல்லது பயன்பாட்டிற்க்கோ வாங்கும்பொழுது அதன் தரம், தராதரம், தன்மை போன்ற பல கேள்விகளை கேட்டு அதனை முழுமையாக அறிந்த பின்னர் தான் அப்பொருளை வாங்குவான்.

ஆனால் 5 வருடத்திற்கு ஒரு முறை வரும் தேர்தலில் மட்டும் தனது வாக்குரிமையை அடுத்தவன் சொல்லித்தான் போடுகிறான். எதனாலே இந்த குழப்பம்? இலவசமா ஓட்டு போடுகிறோம் என்ற எண்ணத்தில் ஏற்படுகிற கோளாறுதான் காரணமா?

சரி இனி ஓட்டு போடுகிறவர்கள், உங்கள் ஓட்டு என்ன விலை போகும் என்று முடிவெடுத்து, பணத்தை சம்பத்தப்பட்ட வேட்பாளரிடம் கொடுத்து வாக்களியுங்கள். உங்களின் பணத்திற்கு அந்த வேட்பாளர் தகுதியானவரா, தரமானவர, தன்னலம் கருதாமல் சேவை செய்ய கூடியவரா என்று ஆராய்ந்து வாக்களியுங்கள்.

இது சொல்வதற்கு சுலபம், மேலும் கேலி பண்ணும் அளவிற்கு உள்ளது போல் தான் தெரியும், ஆனால் இதுதான் உண்மை. காரணம் ஒரு சில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் தங்களுக்கென்று ஒரு ஆசையை வரைந்து வைப்பார்கள். அதன் தகுதியை அடையும் வரை உங்களை விடமாட்டார்கள், அடைந்தவுடன் உங்களை காலால் உதைத்து விடுவார்கள்.

ஆகவே, இது போன்ற ஒரு சில படித்த முட்டாள் அறியசல்வாதிகளுக்கு நாம் சொல்வதை அவர்கள் செய்யவேண்டும் என்றால், இதுதான் ஒரு சிறந்த வழி. இல்லையேல் நம்மை அடிமையாக்கி, நமது துன்பத்தையும் துயரத்தையும் கண்டு இரக்கமில்லா சுயநல அரசியல் நரிகள் நம்மை மெய்துவிடும்.

மக்களாகிய நாம் முட்டாள்கள் அல்ல, ஆனால் நம்மை முட்டாளாக்கி அரசியல் லாபம் மற்றும் அதில் வரும் பணத்தை கொண்டு சல்லாபம் அடிக்க நினைக்கும் அரசியல்வாதிகளை நாம் முட்டாலாக்கவேண்டும். அதற்க்கு ஒரே வழி இனி அவர்களை நாம் சென்று சந்திக்கக்கூடாது அவர்கள் நம்மை வந்து சந்திக்கட்டும்.

ஆதரவு பிச்சை கேட்டு வீடு வீடாக வந்த இவர்கள், இன்று ஏன் மக்களை சந்திக்க வருவதில்லை என்றால், நான் ரொம்ப பிசி.....அதுமட்டும் இல்லாமல் நான் 100 நாட்கள் பாராளுமன்றத்தில் நிறை மக்களுக்காக பேச வேண்டிகிருக்கிறது அதனால் உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் எனது அலுவலகத்தில் முறையிடுங்கள் என்பது.

இன்னும் இந்த அரசியல் கபட நாடகம் எத்தனை நாட்களுக்குத்தான் தொடர்கிறது என்று பார்ப்போம்.

மீண்டும் பிச்சை கேட்கும் நேரம் தூரமில்லை, அருங்கில்தான் உள்ளது என்பதனை மக்கள் மறந்துவிடக்கூடாது.

No comments: