பேசுவதற்கு வாய்ப்பை மக்கள் வழங்கினர் அதனை சிறப்பான முறையில் கூடி பேசினால் நல்லது இல்லையேல் மக்கள் மறுபடியும் மனம் மாறி மக்கள் பிரதிநிதியை மாற்ற இயலும்.
பேச்சை குறைத்து, அமலாகத்தில் ஈடுபடுவதை செய்தால் மிகவும் நன்று.
Monday, November 24, 2008
மீண்டும் ஒரு தற்கொலை
ஒரு சில நாட்களாக கொள்ளை சம்பவத்தில் இந்தியர் மீண்டும் ஈடுபடதொடங்கிவிட்டனர் என்று பத்திரிகை செய்திகள் வெளி வந்த வண்ணமாகவே இருக்கிறது. இவை அனைத்தும் எப்பொழுது தான் ஒயப்போகிறதோ என்று எந்த வல்லுனராலும் சொல்ல முடியவில்லை.
ஈப்போவில் சமீபத்தில் தொடர்ந்து நடந்த கொலை கொள்ளை சம்பவங்களில் இந்தியர்களின் ஈடுபாடு அதிகரித்திருப்பதாக போலீஸ் தெரிவித்தது. இதில் மிகவும் வருத்தம் தர கூடியவை என்னவென்றால், ஜாலான் கோலகங்க்சார் பெட்ரோனாஸ் நிலையத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இந்தியர்களின் வயது 18 - 24 இளையோர்கள் கைது செய்யபட்டனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று காலை நண்பன் இதழை பார்க்கும்பொது என் மனம் மிகவும் வேதனை அடைந்தது. மீண்டும் இந்தியர்கள் தடுப்புக்காவலில் தற்கொலை என்ற சூழ்நிலை மறுபிரவேசம் எடுக்க தொடங்கிவிட்டது.
Subscribe to:
Posts (Atom)