Friday, April 16, 2010

"ம.இ.க-வின் தேசிய தலைவர் அரசியல் மனநோயாளி"

ஒரு கட்சியை வழிநடத்தும் தலைவனுக்கு பல தகுதிகள் இல்லையென்றாலும், கீழ் மட்ட மக்களின் உணர்வை புரிந்துகொள்ளும் அளவிற்கு திறமை இருக்க வேண்டும். ஆனால், ம.இ.காவின் தேசிய தலைவர் இன்று பலர் மறைமுகமாக சொல்லும் அளவிற்கு அரசியல் மனநோயாளி ஆகிவிட்டார் என்பதனை நினைக்கும் பொழுது வேதனையா இருக்கிறது.

சாதனையின் சிகரம் இன்று சரிந்து விழுந்து விட்டது. பொது தேர்தலில் மக்களுக்கு தோதான வேட்பாளரை தேர்வு செய்யும் திறமையற்ற தலைவனை இன்று இந்த நாடே பார்த்துவிட்டது. கிழட்டு சிங்கம் தலைநிமிர்ந்து புதிய வியுகத்தை பார்க்க தவறிவிட்டது. தூர நோக்க சிந்தனை இருந்தும் பார்வை இல்லா மனிதன் போல் மக்களின் பார்வைக்கு சாமிவேலு இருக்கிறார்.

உலுசெலாங்கோர் இடைத் தேர்தலில் மக்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காத சாமிவேலு இன்று தேசிய முன்னணியின் வேண்டுகோளுக்கு இணங்க செயல்பட்டது, தனது அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டதை தெள்ள தெளிவாக காட்டுகிறது. மனம் போன போக்கில் ஒரு மன நோயாளி போன்று பேசிய சாமிவேலு, இன்று அவரது அரசியல் தலைகவசத்தை தானம் செய்யும் அளவிற்கு கீல்தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலைமை தேவையா? இனி அந்த தலைகவசம் இருந்தாலும் ஒன்றுதான் இல்லையென்றாலும் ஒன்றுதான்.

ஒரு கட்சியின் தலைவர் தான் என்பதை மறந்து தலைகனத்துடன் பேசிய சாமிவேலுக்கு தேசிய முன்னணி வழங்கிய அன்பளிப்புதான் இந்த பொதுத்தேர்தலின் வேட்பாளர் கமலநாதன். இவரின் செயல், அக்கட்சியின் அனைத்துமட்ட உறுபினர்களுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதை மக்கள் பரவலாக அறிவார்கள். இவரின் இத்தகையான செயல், அவரின் மதிப்பையும் மரியாதையும் மேலும் வெகுவாக குறைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.

பழனிவேலை தவிர சாமிவேலு வேறு ஒரு இளைய வேட்பாளரை முன்னதாகவே அறிமுக்கப்படுத்திருந்தால் இந்த அவல நிலை கிடையாது. ஆனால் ஏன் பழனிவேல், என்ற கேள்வி இன்னும் பலரின் மனதில் இன்னும் பதிலின்றி அலைகிறது. இளைய தலைமுறையினர் எதை கேட்டாலும் மண்டி போட்டு தான் கேட்க வேண்டும் அளவிற்கு ம.இ.க-வின் அரசியல் உயர்ந்து விட்டது.

ஆகவே அரசியலில் ஒரு மனநோயாளி அல்லது கட்சியின் கோமாளி என்றால் அது ம.இ.க-வின் தேசிய தலைவர் சாமிவேலு என்பதனை தேசிய முன்னணி நன்கு அறிந்து விட்டது. இனியும் அவரின் பதவி காலம் 14 மாதமாக இருந்தாலும் சரி 14 நாட்களாகவும் இருந்தாலும் சரி, எந்த ஒரு லாபமும் கிடையாது ம.இ.காவிற்கு. தன் வார்த்தையை மதிக்காத தேசிய முன்னணியின் கூட்டனி ம.இ.கவிற்கு தேவை இல்லை என்ற தைரியமான எண்ணம் வருமா சாமிவேலுக்கு?