அராஜகம் வழி அரசாங்கம் அமைத்த தேசிய முன்னணியில் ஆலோசகராக நியமன பதவியில் இருக்கும் டத்தோ வீரசிங்கம் எதை அப்படி பேசவேன்டுமோ அதனை தெளிவாக பேசவேண்டும். தாங்கள் வெறும் ம.இ.கா வின் பிரதிநிதி என்பது தேள்ளதேளிவான உண்மை அதனை மறுப்பதற்கு ஒன்றும் கிடையாது. ஆனால் உங்களை மக்கள் எந்த வழியில், எந்த வகையில் பயன்படுத்தி கொள்வது? உங்கள்ளுக்கென்று சேவை மையம் உண்டா? இருந்தால் எப்படி உங்களை சந்திப்பது?
நீங்கள் நியமனம் பெற்ற முதல் இன்று வரை தங்களை மக்கள் பிரதிநிதி என்று கூறும் அளவிற்கு நீங்கள் ஏதும் பெரிதாக செய்ய இயலாதே அந்த திறமையும் உங்கள்ளுக்கு கிடையாதே. காரணம் உங்கள் மேல் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. ஒருவேளை நீங்கள் மிகசிறந்த அரசியல் தலைவராக இருந்திருந்தால் உங்களை மக்கள் சுங்கை சட்டமன்றத்தில் தேர்வு செய்யாமல் போனதின் காரணத்தை சொல்ல இயலுமா.
நேர் கதவில் இடித்து மூக்கை உடைத்து விட்டு, இன்று பின் கதவு வழி அதுவும் இந்திய பிரதிநிதி இல்லாமல் போன ஒரே காரணத்தில் தாங்கள் ஆலோசகரா நியமனம் பெற்றதை முதலில் மறந்துவிடவேண்டாம்.
ஒரு வேலை நீங்கள் ஒரு நல்ல எடுத்துக் காட்டாக விளங்க எண்ணம் கொண்டிருத்தால், உங்களுக்கு பதிலாக ஒரு இளம் தலைமுறை ஒருவரை அப்பதவியில் தேர்வு செய்து அவருக்கு நீங்கள் இலவசமாக ஆலோசனையோ அல்லது அறிவுரையோ வழங்கி இருந்தால் மக்களிடம் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடக்க வாய்ப்புண்டு. ஆனால் நீங்கள் செய்ததோ ஒரு சுயஅரசியல்.
எது எப்படி இருந்தாலும் உங்களுடைய செய்தியில் ஒரு உண்மை உள்ளது. கட்சி வித்தியாசமின்றி ம.இ.கா சேவைசெய்ய மறுவடிவம் எடுத்துள்ளது என்ற உண்மை. மறுவடிவம் பெற்ற பிறகுதான் இந்த யோசனை உங்கள் என்னத்துக்கு தென்பட்டதோ?
முதலில் உங்கள் உட்கட்சி பூசல்களை சரிசெய்த பிறகு மக்களை பற்றி யோசனை செய்யுங்கள்.
Wednesday, February 18, 2009
Subscribe to:
Posts (Atom)