எதற்காக இந்திய ஆய்வியல் துறை பெயர் மாற்றம் கண்டது? அதன் காரணம் என்ன?
முதலில் விளக்கத்தை தந்துவிட்டு அதன் பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் அத்துறையின் விரிவுரையாளர்களின் மேல் குறை கூறி அதன் பெயரை மாற்ற துடிப்பது பல இந்திய சமுதாய மக்களின் பொறுமையை தீண்டிப்பார்ப்பதுபோல் தெரிகிறது.
இது பெயர்மாற்றமா அல்ல தமிழர்களை கொலை செய்வதற்கான முயற்சியா? கண்டிப்பாக இந்த பெயர் மாற்றத்தில் அரசியல் உள்நோக்கமும் உண்டு என்பதனை மறைக்காமல் சொல்லமுடியும். கால காலமாக கட்டிக்காத்த ஒரே ஒரு இந்திய ஆய்வியல் துறை, இன்று அதிகாரத்தின் அராஜகத்தால் பெயர் மாற்றம் கண்டது. இதன் விளைவு எதுவாகினும் அதனை நான் சந்திக்கத் தயார் என்று பேசும் பொழுதே தெரியவில்லையா இதற்க்கு பின்னாடி யாரோ ஒருவர் இதற்க்கு பக்க பலம் என்று.
ஒரு துணை வேந்தர் என்பவர் ஒரு முடிவை எடுக்கும் பொழுது அனைத்து அம்சங்களையும் ஆழமா ஆராய்ந்துதான் ஒரு முடிவை எடுக்க முயலவேண்டும். அதிலும் ஒரு சமுதாயத்தின் சின்னமாக விளங்கும் ஒரு துறையின் பெயரை மாற்ற முடிவெடுப்பது, அந்த இனத்தை கொலைசெய்யும் அளவிற்கு சமமானது.
எத்தனை மகஜர், எந்தனை குமுறல்கள், எந்தனை விமர்சனங்கள், எந்தனை சந்திப்புகள்; இவைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகிவிட்டது.
இந்திய துணை அமைச்சர்களின் சந்திப்புகள், கல்வி அமைச்சரின் வாக்குறுதிகள் எல்லாம் என்னவானது?