Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Thursday, August 27, 2009

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் பெயர் மாற்றம், துணைவேந்தரின் அராஜகம். இன ஒழிப்புக்கு சமமானது.

மலேசியா வாழ் தமிழனை ஏதாவது ஒரு வழியில் சரிகட்டிவிடவேண்டும் என்பதுதான் இந்நாட்டு தேசிய மலாயா பல்கலைக்கழக துணை வேந்தரின் தலையாய கொள்கையோ?

எதற்காக இந்திய ஆய்வியல் துறை பெயர் மாற்றம் கண்டது? அதன் காரணம் என்ன?


முதலில் விளக்கத்தை தந்துவிட்டு அதன் பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் அத்துறையின் விரிவுரையாளர்களின் மேல் குறை கூறி அதன் பெயரை மாற்ற துடிப்பது பல இந்திய சமுதாய மக்களின் பொறுமையை தீண்டிப்பார்ப்பதுபோல் தெரிகிறது.


இது பெயர்மாற்றமா அல்ல தமிழர்களை கொலை செய்வதற்கான முயற்சியா? கண்டிப்பாக இந்த பெயர் மாற்றத்தில் அரசியல் உள்நோக்கமும் உண்டு என்பதனை மறைக்காமல் சொல்லமுடியும். கால காலமாக கட்டிக்காத்த ஒரே ஒரு இந்திய ஆய்வியல் துறை, இன்று அதிகாரத்தின் அராஜகத்தால் பெயர் மாற்றம் கண்டது. இதன் விளைவு எதுவாகினும் அதனை நான் சந்திக்கத் தயார் என்று பேசும் பொழுதே தெரியவில்லையா இதற்க்கு பின்னாடி யாரோ ஒருவர் இதற்க்கு பக்க பலம் என்று.


ஒரு துணை வேந்தர் என்பவர் ஒரு முடிவை எடுக்கும் பொழுது அனைத்து அம்சங்களையும் ஆழமா ஆராய்ந்துதான் ஒரு முடிவை எடுக்க முயலவேண்டும். அதிலும் ஒரு சமுதாயத்தின் சின்னமாக விளங்கும் ஒரு துறையின் பெயரை மாற்ற முடிவெடுப்பது, அந்த இனத்தை கொலைசெய்யும் அளவிற்கு சமமானது.

எதனால் இந்த முடிவு?

எத்தனை மகஜர், எந்தனை குமுறல்கள், எந்தனை விமர்சனங்கள், எந்தனை சந்திப்புகள்; இவைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகிவிட்டது.


இந்திய துணை அமைச்சர்களின் சந்திப்புகள், கல்வி அமைச்சரின் வாக்குறுதிகள் எல்லாம் என்னவானது?


சமீபத்தில் அரசு சார்பற்ற இயக்கங்கள், பிரதமரிடம் ஒரு மகஜரை சமர்ப்பணம் செய்தனர்....அதற்க்கு கிடைத்த அங்கிகாரம் தானோ இது.

ஆரம்ப கட்டத்தில் வாயை மூடிய வாறு இருந்து, அந்த துணை வேந்தரின் சொற்க்களை கேட்ட தலையாட்டி பொம்மைகளால் வந்ததுதான் இந்த விணை.
இனியும் பொறுத்திருந்தால் முட்டாள் ஆகிவிடுவோம்.

இதற்க்கு என்னதான் வழி. அந்த ஆராஜக துணை முதல்வரை உடனே பணிநீக்கம் செய்யவேண்டும். இல்லையேல், இந்திய சமுதாயம் மீண்டும் ஒன்று திரண்டு, நமது அடையாள சின்னத்தை காக்க ஒரு எழுச்சி பேரணியை உருவாக்க வேண்டும்.

மீண்டும் கூடுமா இந்த இந்திய சமுதாயம்?

Thursday, July 9, 2009

வருத்தம் கூடிய வாழ்த்துக்கள்

காலம் தமத்தத்துடன் அடையும் வெற்றி எந்த ஒரு பயனையும் தராது என்பதனை நாம் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். இந்நாட்டில் வாழும் இந்தியர்களை அவமானப்படுத்தும் வகையில் தமிழர் அல்லாதவர் ஒருவரை நியமனம் செய்வதற்கு முன்னமே அதன் விளைவுகளை ஆராய மறுத்த காரணத்தை மலாயா பல்கலைகழகத்தின் துணை வேந்தர் தெளிவு படுத்தவேண்டும்.

தாம் பதவில் இருந்துக்கொண்டு அதன் அதிகாரத்தை சொந்த விருப்பதிற்கு ஏற்ப பயன்படுத்தகூடாது. இந்தியர் ஆய்வியல் துறையில் பல பிரச்சனைகள் இருக்குமாயின் அதனை முதலில் முழுமையாக விசாரணை செய்த பிறகுதான் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர வேண்டும்.

ஒரு பதவில் இருந்துக்கொண்டு செய்த தவற்றை அறிந்து மன்னிப்பு கேட்பதில் எந்த ஒரு பயனும் கிடையாது. எந்த முடிவானாலும் ஒரு சமுகத்தையும் பாதிக்காமல் இருக்க சிறப்பான முறையில் பனி புரியவேண்டும்.

தற்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரச்சனையை பார்த்தல், மலாயா பல்கலைகழக துணை வேந்தர்தான் முதலில் இடை நீக்கம் செய்யவேண்டும், காரணம் ஒரு பிரச்சனையை தீர்ப்பதாக சொல்லி புதிய பிரச்சனையை உருவாக்கியதற்காக.

சமீபத்தில் ம.இ.க வுடன் நடத்திய சந்திப்பு கூட்டத்தில், அத்துனை வேந்தர் இது ஒரு தற்காலிக நியமனம் என்றும் மறு நியமனம் கூடிய விரைவில் அதுவும் ஒரு தமிழர் தான் அப்பதவிக்கு நியமனம் பெறுவர் என்றும் செய்திகள் வெளிவந்தன.

அது ஒரு பக்கம் மகிழ்சி தந்திருந்தாலும், இந்திய மக்கள் உணர்வை உரசிப்பார்த்த அந்த துணை வேந்தர் இந்தியர்களிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் உதயமாகாமல் பாதுகாத்துக்கொள்ள அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும்.