பசி என்று வந்தவனுக்கு குடுத்து உதவ மனம் இல்லை ஆனால் பிறரை தொந்தரவு செய்யாமல் ஒரு வெள்ளிக்கும் இரண்டு வெள்ளிக்கும் மற்றவர்களுடைய வாகனம் களவு போகாமல் பாதுகாக்கும் ஒருவனை காவல்துறையிடம் பிடித்து கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?
நீங்களும் இதுபோன்றவர்களுக்கு உதவ முன்வரமாட்டீர், அவர்களையும் சம்பாரிக்க விடவும் மாட்டீர். பிறகு இவர்கள் எப்படித்தான் வாழ்வது? வழி ஏதும் உண்டா?
இரக்கமில்லாத ஜென்மங்கள்... பூமியில் வாழ தகுதி இல்லாதவர்கள்,
அதைவிட ஒரு கேவலம்... தன் இணைத்தை காட்டிக்கொடுப்பது,
எத்தனையோ பிற இனத்தை சேர்ந்த மக்கள் இது போன்ற செயல்களை செய்கின்றனர், அவர்களை கேட்க தைரியமில்லை ஆனால், ஒரே ஒரு உணவு கடை உரிமையாளர் சொன்ன குறையை வைத்து உடனே நடவடிக்கை எடுத்தார்கலாம். குறையை சொன்ன அந்த உணவு கடை உரிமையாளர் ஒரு சீன இனத்தை சேர்ந்தவர்.
அந்த சீனனுக்கு தெரிந்த விஷயம் நம்ம முட்டாள் பிரதிநிதிக்கு தெரியவில்லை. அது என்னது? வேற என்ன நண்டு கதைதான்.