Saturday, June 5, 2010

அரசின் நிபந்தனையில் பாதிக்கப்படுபவர்கள் யார்?

இப்போது சிறந்த இந்திய மாணவர்களில் வெறும் 70 மாணவர்களுக்கு உபகார சம்பளம் வழங்கப்பட்டது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

என்னதான் சிறந்த முறையில் படித்தாலும், அராசாங்க கல்வி உபகார கல்வி உதவி இந்தியர்களுக்கு ஒரு கேள்வி குறியாகவே இருக்கிறது. இந்த சூழ்நிலை மாணவர்களின் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளிதான் என்ற நிலை வந்துவிடும்.

எங்கே செல்கிறது வருங்கால இந்தியர்களின் எதிர்காலம்? எல்லாம் நிபந்தனைக்கு உட்பட்டது என்றால் அந்த நிபந்தனைதான் என்ன? நிபந்தனை வருடா வருடம் மாற்றம் காண்பதும் எதற்க்காக. இது ஒரு தொடர் கதையாகிவிட்டது.

இவ்வருடத்தின் புதிய நிபந்தனை என்ன என்பதனை மத்திய அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு தெளிவு படுத்தவேடும். கடந்த பத்து வருட மற்றிகுலசென் இட ஒதுக்கீட்டை பற்றி அரசாங்கம் உடனடியா புள்ளிவிவரத்துடன் தெளிவுபடுத்தவேண்டும்.

ஏன் இத்தகைய நிபந்தனையை மத்திய அரசு மேற்கொள்ள நேரிட்டது? எல்லா காலகட்டத்திலும் சம உரிமை என்று பேசிய மத்திய அரசாங்கம் திடீர் என்று இந்திய மாணவர்களை ஓதுவது ஏன்? உயர்கல்வியில் இந்திய மாணவர்களின் விழுக்காடு குறைப்பதற்கான சதித்திட்டமா இது? இதை உயர்கல்வி உலகம் நன்கு அறியும்.

எந்த நிபந்தனையும் இல்லாமல் இருந்துவிட்டு, இப்போது வெறும் 70 மாணவர்களுக்கு மட்டும் இடம் என்று அரசு நிபந்தனை விதிப்பது அதிகபட்சமான செயலாக தெரிகிறது.

ஆனால் குறைந்தபட்சம் அனைத்துப் பாடங்களிலும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எதிர்பார்பிர்க்கும் அரசாங்கம் உரிமை வழங்கப்பட வேண்டும்.

இந்திய மாணவர்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இந்த மாணவர்களின் விகிதம் குறைத்து வருகிறது.

அரசின் நிபந்தனையில் பாதிக்கப்படுபவர்கள் யார்? வசதி குறைந்தவர்கள்.

எந்த நிபந்தனையும் இல்லாமல் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உபகார உதவித் தொகை வழங்க வேண்டும் என்று நிபந்தனை மட்டுமே இந்த தொடர்கதையின் முடிவாகுமே ஒழிய வேறு எதுவும் கிடையாது.