Thursday, July 30, 2009

இன்று பேரணியில் மொழிவளமும் தமிழர்களும்

மலேசியா இந்தியர்களுக்கு பெருமையும் நற்பெயரையும் தானாக தேடி தந்த நிகழ்வு. ஒருவரை காட்டி கொடுப்பதும் மற்றும் சொந்த இனத்தை வாய்க்கு வந்ததுபோல் பேசுவதும் என்னை மேனி சிலிர்க்க வைக்கிறது.


அஹா, கல்விமான்களும் சமுதாய உணர்வு கொண்ட தலைவர்களும் ஏற்பாடு செய்த இந்த பேரணியில் கொள்கை மாறுபட்டிருந்தாலும், தனது தாய் மொழியான தமிழ் மொழியை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதை பார்க்கும்பொழுது சொல்ல வார்த்தையே கிடையாது.

சிறுபான்மையாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காமல் மொழி வளத்தை காண்பித்தனர். பலே !!!!! இது அல்லவா சமுதாய உணர்வு.....இனி எத்தனை புரட்சி செய்தாலும் கொள்கையில்லா அரசியல் வதந்திகள் அதாவது அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்த இந்திய சமுதாயம் பின்னடைவை மட்டுமே தெளிவாக பார்க்கமுடியும்.

போராட்டம்தான் தீர்வா

மலேசியா வாழ் தமிழர்கள் சம்பாரித்து வைத்த அனைத்து சேமிப்பையும் இன்று முதலீடு போட்ட நிறுவனத்தில் அதுவும் இந்தியர்க்கு சொந்தமான நிறுவனத்தில் போட்டதை திரும்ப பெற பல போராட்டம் நடத்தி தான் பெற முடியுமா? உரிமை என்ன செத்துவிட்டதா? பேசித்தீர்க்க முடியாத ப்ரிரச்சனையா இது?

தயவுசெய்து இந்நாட்டு இந்திய மக்களை சுய அரசியல் லாபத்திற்கு தெருவில் நிறுத்தி ஆர்பாட்டம் செய்வதை கொஞ்சம் குறைத்துக்கொண்டால் கொஞ்ச நெஞ்சம் இருக்கும் மானமும் மிஞ்சும் என்பதனை சம்பத்தப்பட்டவர்கள் மனதில் கொள்ளவேண்டும்.


நான் யாரையும் குறைகூறும் என்பதற்காக சொல்லவில்லை ஆனால் ஓட்டுபோட்ட மக்களை முட்டாலாகாதீர் என்பதுதான் என்னுடைய கருத்து. நல்ல தீர்வை தர முடியாவிட்டால், இந்தியர்களை அவர்களின் வழி செல்ல விடுங்கள். சுயநிர்ணய உரிமையை ஏற்று செயற்படுவதற்கான வளம்மும் குணமும் மனதைரியமும் இந்தியர்களுக்கு உண்டு என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.


இந்த நாட்டில் இது போன்ற பிரச்சனை தொடர்பில் இருக்கின்ற இந்திய பிரதிநிதிகள் ஒற்றுமை இல்லாததாலே நிலைமை இன்று படு மோசம் அடையும் நிலை வந்துவிட்டது.


இன்று மைக்கா கட்டிடம் முன் நிகழ்ந்த போராட்டத்திக்கு யார்தான் காரணம்? வாங்கிய பணத்தை கேட்டால் தர முடியாது என்றுமட்டும் சொல்லாமல் அடியும் உதையும் கொடுத்த மைக்கா நிறுவனமா? தலைமை பொறுப்பில் இருந்துக்கொண்டு வாய்பேசும் தனயனா? இந்திய சமுதாயம் தெருவில் நின்றுதான் உரிமையை கேட்க முடியும் என்ற கொள்கையை பரப்பும் அரசியல் தலைவர்களா? அல்லது அந்நிறுவனத்தின் மேல் தடை உத்தரவு பெற்ற கூட்டுறவு கழகம் தான் காரணமா? சிந்தியுங்கள்.


இது போன்ற தெரு ஆர்பாட்ட முயற்சிகள் சரியான தீர்வை கொண்டுவரும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட எனக்கு நம்பிக்கை இல்லை. இப்படிப்பட்ட ஆர்பாட்ட கூட்டங்கள் பிறருக்கு பொழுதுபோக்கு பொருளாக மட்டுமே காட்சியளிக்கும். அதற்க்கு இந்திய சமுதாயம் ஒரு பொழுதும் சோரம் போகக்கூடாது. இதுவரை நாம் கண்ட முன்னேற்றகரமான பின்னடைவு நாமாக உருவைக்கியவை. பின்னோக்கி செல்ல இனிமேலும் நம்மால் முடியாது. அதற்காக யாரையும் தூக்கு தூக்கி வேலை செய்து சாதிப்போம் என்று முழக்கமிட சொல்லவில்லை.


யார் போராட்டவாதி, யார் சுயநலவாதி, யார் பொதுநலவாதி, யார் அரசியல்வாதி என்ற வித்தியாசங்களை மக்கள் உற்று கவனிக்கவேண்டும். கண்டிப்பாக உண்மை மலரும் அதில் தெளிவு பிறக்கும்.


ஒரு சிலரின் சுய அரசியல் லாபத்திற்கு இன்று மக்களை தெருவில் கொண்டு வந்தவர்கள் நாளை நமது உரிமை கண்முன் அம்மணமாக நிற்கும் பொழுது உதவ முன்வரமாட்டார்கள். போதும் இது போன்ற அவலநிலை.

இனி எது செய்தாலும் சுய எண்ணத்துடன் செயல்படுங்கள் இந்திய சமுதாயமே !!!!!!!!!