இருக்கும் பிரச்சனைகள் இன்னும் எதுவும் மக்களுக்கு தோதாக இல்லை எனலாம். சமீபத்தில் அரசியல் செயலாளரின் இறப்பு, கம்போங் புவா பாலா நில விவகாரம் அனைத்தும் தேசிய முன்னணிக்கும், மக்கள் கூட்டணிக்கும் பெரிய பாதிப்பை உண்டு செய்யும் என்பது சொல்ல வேண்டிய கருத்தாகும்.
மலேசியா மண்ணில் இந்தியர்களின் நிலை குறித்து எந்த சாமி பேச முன்வந்தாலும், அந்த சாமி (சுயநலவாதிகள்) எந்த போர்வையில் தன்னை மறைத்து கொண்டு வருது என்பதை மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். சுருக்கமாக சொல்லபோனால் அந்த சாமி ஒரு அரசியல் ஆசாமி எனலாம்.
இந்தியர்களின் வாழ்கையை தீர்மானிப்பவர்கள் நமக்கு இனி நாமாகத்தான் இருக்க முடியுமே தவிர எந்த பச்சத்திலும் அரசியல்வாதிகளாக இருக்க முடியாது. ஒரு குழப்பமான பிரச்சனைக்கு விடை கேட்க சென்றால், உடனேயே நம்மை தெருவில் கொண்டு சென்று, பத்திரிகை வழி சுய அரசியல் விளம்பரம் தேடிவிடுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன வென்றால், மீண்டும் பெரியளவில் பேரணி நடத்தவேடும் என்ற இன்னொரு குண்டையும் அள்ளி போடுகிறார்கள்.
"ஐயா சுயநல அரசியல்வாதிகளே தயவுசெய்து, எதையும் செய்வதற்கு முன்பு சற்று சிந்தித்து செயல்படுங்கள். உங்களை நம்பி ஒட்டு போட்ட மக்களை மூலையில் அமரவைத்து ஒப்பாரி விடும் அளவிற்கு கொண்டுசெல்லாதீர். இன்றைய வரைக்கும் உங்கள் மனைவி மற்றும் குடும்ப மக்கள் எந்த ஒரு வீதி பேரணியில் கலந்துகொண்டதுண்டா? இல்லாதவர்கள் என்றால் அவ்வளவு கேவலமா? இல்லாதவர்கள் வயித்தில் நெருப்பை அள்ளி கொட்டாதீர். "
இந்நாட்டில் பதவிக்கும் பட்டத்திற்கும் அலைபவர்கள் மக்கள் கூட்டணியிலும் உண்டு. அதற்க்கு நிறைய கைவசம் உன்டு சொல்ல . ஆனால் புண்ணியமில்லை.
அதனை சொல்லித்தான் தெரிய வேண்டும் அவசியமில்லை. சொல்லாமலே நிறைய மக்கள் அதனை அறிவார்கள்.
இன்று ஒவ்வொரு உணர்ச்சி உள்ள தமிழன் மனதில் கம்போங் புவா பால நிலப் பிரச்சனை ஓசையிட்டு கொண்டிருக்கிறது. அதுவும் மக்கள் கூட்டணி மாநிலத்தில்.
எங்கு சென்றனர் மக்கள் கூட்டணியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள்? காணாமல் போய்விட்டார்களா அல்லது மக்கள் முகத்தை பார்க்க தைரியம் இல்லையா? கிடைத்த தகவல் படி தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே அங்கு சென்று வருவதாக தகவல் வந்தது. மிகவும் சந்தோசம், ஆனால் மற்றவர்கள் எங்கு சென்றார்கள்?
கைதொலைப்பேசி மணி அடித்தவன்னமே இருக்கிறது ஆனால் அதில் யாரும் பதில் பேசுவது கிடையாது. ஒருசிலர் "இந்த பிரச்சனையை பற்றி நான் நாடாளுமன்ற கூட்டத்தில் எழுப்பினேன்" என்று சொன்னவர்கள் இன்று நாட்டிலேயே இல்லையாம். இது எப்படி இருக்கிறது.
மக்கள் கூட்டணி என்ற ஒரு நல்ல சிறந்த பெயரை வைத்துக்கொண்டு, இன்று மக்களை கோமாளிகளாக ஆக்கிவிட்டார்கள்.
தனக்கே தகராறா இருக்கு, இதில் பொது மறு தேர்தலா? பேஷ் பேஷ்......கொஞ்ச நெஞ்ச மானமும் கூடிய விரைவில் கப்பல் ஏறி போகப்போது.
இந்நாட்டில் எந்த நாளும் மக்கள் பங்கு பெறாத புரட்சி வென்றதாக சரித்திரமில்லை? இந்ட்ராப் நினைவுள்ளதா? சரித்திரம் படைத்தது..... அது போல எல்லா பேரணியும் சரித்திரம் படைக்கும் என்று மனப்பால் குடிக்கவேண்டாம். அது பொதுநல குணங்கொண்ட தலைவனாலே மட்டுமே முடியும். அரசியல் வதந்திகளை பரப்பும் அரசியல்வாதிகளால் முடியாது (ஒரு சிலர்).
போராட்டம் நடத்தும் மக்களை கண்டு ஏமாளி என்று சொல்லும் குணங்கொண்ட தலைவன் நமக்கு தேவையில்லை.போராட்ட குணங்கொண்ட மக்கள் நலவாதிகள் தான் நமக்கு தேவை.
அரசியல் கொள்கை இனி தேவையில்லை காரணம் கொள்கையில் பல கோளாறுகள்.அரசியலை வெளிதோற்றமாகவும் மன தர்மத்திற்கு கட்டுப்பட்டவனாக உள்ள தலைவன்தான் இனி மக்கள் தலைவனாக முடியும் என்பதனை மறந்துவிடாதீர். மக்கள் அதனை அறிவார்கள்.
”ஒருவன் கத்தியில் குத்த வரும்போது அந்த நொடியில் உயிர் காக்க அவனை தாக்குவதை விட அவன் கத்தியை தையிரியமாக எதிர்த்து நிற்க்க தான் அதிகமான மன உறுதியும் தையிரியமும் வேண்டும் – ஆனால் நான் உங்களை கத்தியில் குத்து வாங்கி சாக சொல்லவில்லை” போராட்டம் மனதில் பிறந்து, ஒருவரிடமிருந்து ஒருவராக வளர வேண்டும். அதனை வளர்த்துவிட்டால் வெள்ளி மாநிலத்தில் மறுதேர்தலை மக்கள் கூட்டணி சந்தித்து வெற்றி வாய்ப்பை அடையும் நிலை சாத்தியம்.
ஆனால் சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி போல ஒரு சில அரசியல் கோணங்கிகள் தேர்தல்..... தேர்தல்...... என்று ஓலமிடுவது நல்லதல்ல. நினைவில் கொள்ளவும்.