எத்தனை மகாத்மாக்கள் வந்தாலும் இந்த இந்திய சமுதாயம் மாறது ஐயா மாறாது......!!!!!! கேவலத்தின் சின்னம் நாம்......வெட்கம் என்பது கிடையாதா?
ஒருவரின் துன்பம் இன்னொருவருக்கு லாபத்தை தருகிறது. அது கட்டாய சூழ்நிலை.
பிணத்தை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் ஒரு சில அரசியல் வாதிகளை என்னென்று சொல்லி அழைப்பது?
சமிபத்தில் உயிர் இழந்த நமது மனித உறவுகளுக்கு நமது துயரத்தையும் இரங்கலையும் முதலில் தெரிவித்துக்கொள்வோம். ஆனால் அந்த உயிர் பிரிந்த உடலை வைத்து சுய அரசியல் விளம்பரம் செய்ய வேண்டாம், அதுவும் நீதிக்காக தான் போராட்டம் என்று கூறுவதையும் நிறுத்திக்கொள்ளவும்.
நீதி தேவதை உங்கள் கண்முன் உதயமானால் கண்டிப்பாக கொள்கையில்லா அரசியல்வாதிகளுக்கு செருப்படி விழும் சாத்தியம் உள்ளது. நீதி தேவதை வரமாட்டாள் என்று தானே இந்த அரசியல் ஆட்டமெல்லாம்.
இது போன்ற செயல் , நாம் காலம் காலமாக சேர்த்து வைத்த பண்பாட்டிற்கே விரோதமானது. உண்மையான உணர்வுள்ள தமிழன் என்றால் இது போன்ற இறப்பு நாம் அனைவரையும் மன உளைச்சலை கொடுத்து மற்றும் மரணத்தின் மீது அரசியல் லாபம் தேடும் இரக்கமற்ற சுய நலம் கொண்ட அரசியல்வாதி மீது வெறுப்பை தோற்றுவிக்கும்.
ஏற்கனவே தேசிய முன்னணி தமிழன் சோற்றில் மண்ணைவாரி போட்டுவிட்டது என்றால்....... மாற்று கூட்டணி, மீதி இருக்கிற மண்ணை வாயிலேயே திணித்துவிடும் அளவிற்கு இருக்கிறது. என்ன கொடுமை.
அண்மைய கால அறிவிப்புகள், மக்களிடையே எரிச்சலை உருவாக்குகிறது....... மறந்து விடவேண்டாம்.......
"இது எச்சரிக்கை அல்ல மக்களின் புலம்பல்களில் ஒன்று"
(இதன் மரைமுகமான செய்தி ஒரு சில அரசியல்வாதிகளுக்கு சேர வேண்டும் என்பதனை இதன் வழி தெரிவித்துக் கொள்கிறேன்)