Monday, July 27, 2009

புதிய அரசியல் சுனாமி ஏற்பட்டால் என்னவாகும்?

ஜனநாயகத்தின் பிறப்பிடம் என்று கருதப்படும் மலேசியாவின் நாடாளுமன்றம், சமீபத்தில் அடித்த பலவிதமான புதிய சுனாமியின் அலைக்கு நாட்டின் அரசியல் கட்டமைப்பு அஷ்திவாரத்தோடு அலசிப்பார்க்கும் அளவிற்கு தாக்கத்தை எற்படுதிவுள்ளது.

அப்படி என்னதான் பெரிய விஷயங்கள் நடந்தது என்று கேட்டால், முதலில் அளசிபார்க்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய சேவகர்களாக இருக்கவேண்டுமே ஒழிய மக்களை உதாசினப்படுத்தும் வஞ்சகர்களாக இருக்கக் கூடாது.

அப்படித்தான் நான் இருப்பேன் என்றைக்கும் தன் போக்கு தனித்தன்மை வாய்ந்த போக்கு என்று வீர வசனம் சொல்லும் இன்றைய சந்தர்பவாத அரசியல் தலைவர்கள் மீண்டும் மக்களிடம் கையேந்தும் நிலை வர வாய்ப்பு உள்ளதை மறந்துவிடக்கூடாது.

தற்பொழுது நடக்கும் அரசியல் சூழ்நிலை மக்களின் அபிமான கருத்துக்கள் மலேசியா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தத்தும் நிலைக்கு உள்ளது. கடந்த பத்து வருடத்திற்கு மேல் அரசியலில் இருக்கும் தலைவர்கள் மக்களிடையே படுவேகமாக அரசியல் செல்வாக்கில் வீழ்ச்சி அடைந்தனர் என்பதனை மறந்துவிடக்கூடாது. அதிலும் இந்தியர்களின் நிலை படு மோசம் என்பதனை சொல்லாமல் இருக்க முடியாது.

அதற்கான காரணங்கள் குகனை போல தடுப்பு காவலில் உயிர் இழந்த இந்தியர்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பு, இந்தியர்களின் சொந்துடமை விகிதம் இன்னும் ஏற்றம் காணாமல் இருப்பதும், மேலும் இந்தியர்களின் அரசாங்க வேலை வாய்ப்புகளில் ஏற்றம் என்ற புள்ளி விவகாரம் இல்லாத தகவல் மற்றும் பல.

இந்த தாக்கங்களின் கொடுத்த வீழ்ச்சியின் எதிரொலி மறுபடியும் எந்த திசை வீசும் என்பதே ஒரு பெரிய கேள்விக்குறியாகி விட்டது. ஆரம்பத்தில் வீசிய சுனாமி இந்தியர்களை ஒதுக்கிய அனைவரையும் தவிடுபோடியாக்கியது. அதில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒரு சிலர் மட்டுமே கரைசேர்ந்தனர்.

இந்த அவல நிலை இந்தியர்களுக்கு மலேசியா மண்ணில் தொடர்கதை ஆனால் மீண்டும் அடிக்கும் சுனாமியில் மொத்தமாக அனைவரையுமே சுருட்டிக்கொண்டுபோய்விடும் என்பதனை மறந்துவிடக்கூடாது.

இன்றிய அரசியல் மாற்றங்களில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது இன்றைய தினசரி பத்திரிக்கைகள். அவைகளுக்கு முதலில் நன்றி தெரிவித்தல் வேண்டும். கடந்த பொது தேர்தலுக்கு பிறகுதான் பல பிரச்சனை உள்ள விவகாரங்கள் பத்திரிக்கைகளில் வெட்ட வெளிச்சமாக எழுதிய பிறகு இன்றைக்கு இந்தியர்களின் நிலை உயர்வுகாணும் அடித்தளமாக அமைந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற அரசியல் மறுமலர்ச்சியில் தான் இந்தியரின் நிலை குறித்த "பல இரகசியங்கள்" செயல் வழி செய்தியின் மூலம் பல உலக நாடு மக்களின் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இந்த கால கட்டத்தில் நடைபெற்ற மறுமலர்ச்சி தான் இந்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியது.

ஆகவே இன்று பதவியில் இருக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகள் சற்று மேல்நோக்கி பார்ப்பதை நிறுத்தி, மக்களை நேருக்கு நேர் நோக்கி பார்க்கும் அளவுக்கு பழக்கத்தை மாற்றியமைத்தால் அவர்களின் மீது காணப்படும் கறுப்புக்கரை கழுவப்பட்டு இனிவரும் அரசியல் அழுக்கற்ற கட்டமைப்பை கொண்டிருக்கும் எம்பதை தைரியமாக சொல்லலாம். இதற்க்கு இன்றைய அனுபவமுள்ள இந்திய பிரதிநிதிகளே பதில் சொல்லே முடியும்.

நன்றி.