Tuesday, August 11, 2009

இனியும் ம.இ.கா தேசிய முன்னணியில் இருந்து என்ன லாபம்?

சமீபகாலமாக மக்கள் கூட்டணியில் தொடர்கதையாக நிகழ்ந்து வரும் அனைத்து பிரச்சனைகளுமே ஒரு நல்ல தீர்வுக்கு அடித்தளம் என்பதனை அனைவரும் மறந்துவிடக்கூடாது.

தேசிய முன்னணி இல்லாத பல குற்றங்களை மக்கள் கூட்டணி அரசாங்கத்தின்மேல் வீணாக பாய்ச்ச முயன்றுவருகிறது என்ற உண்மை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இவர்களின் கனவு கனவாகவே தான் இருக்குமே ஒலிய அது ஒரு பொழுதும் நினைவாகாது.

எந்த ஒரு திட்டமும் மக்கள் முழுமையாக பயன் பெற வேண்டும் என்பதே மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் கொள்கை. அதனால் தான் முள்வேலியில் சிறைப்பட்டு வாழ்ந்த வாழ்க்கை போதும் இனியும் அது தொடர இடம் அளிக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு இந்தியர்கள் மக்கள் கூட்டணி மீது அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான அரசாங்கத்தை தேர்வு செய்தார்கள்.

அவர்களின் தேர்வு ஒருபொழுதும் தவறாகாமல் இருக்க மக்கள் கூட்டணி பல இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளை ஆங்காங்கே தங்க சமயத்தில் குரல் எழுப்புகின்றனர்.

இன்றைய காலம் வரை இந்திய சமுதாயத்திற்கு கிடைக்கவேண்டிய அனைத்து சலுகைகளுமே சுருதி குறைந்த பாணியில் இருந்தது. தைரியத்துடன் கேட்க வேண்டிய அனைத்து உரிமைகளும் கெஞ்சி கேட்கும் அளவிற்கு தரம் குறைந்து விட்டது. இவை அனைத்துக்குமே காரணம் ம.இ.கா தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

சொந்த அரசியல் லாபத்திற்கு இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியை அடமானம் வைத்த கட்சி ம.இ.கா, தேசிய முன்னணியின் தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடியவர்கள் இவர்கள். இன்று புரட்சி வசனம் பேசி மக்களை மீண்டும் பாதாளத்திற்கு தள்ள முயல்கிறார்கள்.

தேசிய முன்னணியில் நடக்கும் அனைத்து தவறுகளையும் தைரியத்துடன் விமர்சிக்க கூடவில்லை என்றால், உள்ளே நடக்கிற அனைத்து உண்மைகளை இந்திய மக்களுக்கு எப்படி எடுத்து சொல்ல முடியும். மறைக்கப்படும் உண்மைகள் பேசப்படும் பொய்களை விட பெரும் கேடு விளைவிக்காதா என்ற உண்மை அறிந்தும் தெரியாமல் இருந்தவர்கள் நீங்கள். இன்று இந்திய சமுதாயத்தை பல வித குறுக்கு வழியில் பேரம் பேசி ஏமாற்ற பார்க்கிறீர்களா?

ம.இ.கா ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும், அதாவது பல ஆயிரம் மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியபோது, திரைமறைவில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் நீங்கள். இனியும் உங்கள் ஜம்பம் இங்கு பலிக்காது.

ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியை கண்ட பொழுது மக்களின் முன்னேற்றத்தில் மண்ணைவாரி இரைத்த நீங்கள் இனியும் தேசிய முன்னணியில் கூட்டணி வகிப்பது என்ன நியாயம்? தேவையா இந்த கூட்டணி.

கெஞ்சி கேட்டு சமாதானமாக சென்றால் இந்நாட்டில் நாம் அடிமைகளாக தான் இருக்க முடியுமே ஒலிய தலை நிமிர்ந்து நடக்க எந்த சாத்தியமுமில்லை.

அடிமை மனப்பான்மை குணத்தை விலக்கி மானமுள்ள இந்திய இனம் இந்த மண்ணில் வாழ முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு ஒப்பாரி புலம்பல் தேவை இல்லை என்பதனை அறிய சாதனை தலைவர் சிந்திக்கவேண்டும்.

இனியும் அம்னோ போன்ற அரசியல் முதலைகளிடம் நமது உரிமைக்காக கண்ணீர் விடுவதை விட்டு விடுங்கள். இந்த இந்திய சமுதாயத்தின் புதிய வாழ்க்கை களம் காத்துக்கொண்டிருக்கிறது. அதனை மக்கள் கூட்டணி இந்திய தலைவர்கள் மட்டுமே உருவாக்கிகொடுக்க முடியுமே ஒலிய வேர எந்த கட்சியினாலும் முடியாது.

இந்நாட்டில் இந்திய மக்களின் பிரச்சனை அழுதால் சாதிக்கமுடியாது, அடித்தால் மட்டுமே வெற்றி உறுதி என்பதனை நினைவில்கொள்ளவும்.

அது மக்கள் கூட்டணியில் சாத்தியம் !!!!!