நாட்டில் புதிய பிரதமருக்கு வாழ்த்து, பாராட்டு, வரவேற்பு கொடுத்து, இந்திய சமுதாயத்திற்கு என்னில் அடங்காத ஏமாற்றத்தை அள்ளி அள்ளி வழங்குவதில் ம.இ.கா தலைமைத்துவம் மீண்டும் வெற்றி கண்டுள்ளது.
தேசிய முன்னணியின் அரசியல் கொள்கைகளை இன்னும் ம.இ.கா சரிவர புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
மலேசியாவின் அரசியலில் என்ன நடக்கிறது என்று அவர்களுக்கும் விளங்கவில்லை மக்களுக்கும் விளங்கவில்லை. இந்திய சமுதாயம் பொதுவாக ஒரு பிரச்சனைகளை எழுப்பும் போது ஒவ்வொரு தடவையும் தேசிய முன்னணிக்கே சாதகமாக பேசிய ம.இ.கா, இனிமேலும் அந்த கூட்டணில் நின்று என்ன சாதிக்க முடியும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
கடந்த போது தேர்தலில் தேசிய முன்னணி பாதிப்புக்கு உள்ளாகியதில் ம.இ.கா பெரும் தோல்வியை தழுவியது. அதில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று மூன்றே மூன்று நாடாளுமன்றத்தில் அற்பத்தனமான வெற்றிகளை கண்டனர்.
இவர்கள் மூவரும் அமைச்சரவையில் இருந்துகொண்டு கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லும் தேசிய முன்னணியின் கைக்கூலிகளாக இருக்கிறார்கள் ஒழிய, இந்திய சமுதயத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் இன்னும் ஒரு கேள்விகளை கூட நாடாளுமன்ற கூட்ட தொடரில் கேட்க வாய்ப்பிலந்ததை பற்றி யோசிக்க மறந்து விட்டனர்.
இருப்பினும் கட்சியின் தன்மான சிங்கமான தேசிய தலைவர், ம.இ.கா தான் இந்தியர்களின் சின்னம்,சிகரம், அடையாளம் என்று பேசிய வாரே சமுதாயத்தை பின்தள்ளி காலத்தை கடக்க எண்ணம் கொண்டுள்ளது போல் தெரிகிறது.
மேலும் ஓரு இந்திய பிரதிநிதிக்கு முழு அமைச்சர் பதவியை கொடுக்க மறுத்த தேசிய முன்னணியின் கொள்கை, மலேசியா வாழ் இந்தியர்களை உதாசினப்பதியதுபோல் தெள்ள தெளிவாக தெரிகிறது.
நஜிப்பின் இந்த அமைச்சரவையில் மேலும் ஓரு இந்திய அமைச்சர் பதவியை உரிமையுடன் கேட்பதில் ம.இ.கா மட்டும் மின்றி ஒட்டுமொந்த இந்திய சமுதாயத்தின் கனவுகளை காலுக்கு அடியில் மிதித்த தேசிய முன்னணியில் ம.இ.கா மீண்டும் அங்கம் வகிப்பதில் எந்த ஓரு லாபமும் கிடையாது.
இனியும் ம.இ.கா தேசிய முன்னணியில் அங்கம் வகிந்தால், எலும்புத்துண்டுக்காகக் காத்திருந்து, ஏற்பட்ட அவமானத்தையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு பதவி கிடைத்தால் போதும் என்று வாலாட்டத் துவங்க வேண்டியதுதான்.
'அரசியலில் எல்லாம் சகஜமப்பா' என்று சொல்லலாம், ஆனால் சுயமரியாதை இழந்து அரசியல் நடந்த வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தாள், ம.இ.கா தேசிய முன்னணியின் உருகாய்யாகத்தான் இருக்கமுடியும்.
Thursday, April 16, 2009
Subscribe to:
Posts (Atom)