Sunday, July 19, 2009

கண்ணீர் வடிக்கிறது ஜனநாயகம்

மனித வாழ்வில் இழப்பு என்பது புதிதல்ல ஆனாலும் சகோதரர் தியொ பெங் ஹோக் அவர்களின் மரண செய்தி நாம் அனைவரும் இடுந்து விழும் அளவிற்கு அதிர்ச்சியில் தள்ளிவிட்டது.

இந்நாட்டில் ஜனநாய எல்லை மீறல் என்பது சர்வசாதாரணமான செயலாகிவிட்டது. அரசியலில் பகைமை என்பது புதிதல்ல ஆனாலும் ஒரு மனிதனின் உயிரை பறிக்கும் அளவிற்கு அரசியல் நடத்துவது பெரும் வேதனையை தருகிறது.

எதுவானாலும் நேருக்கு நேர் மோதும் குணம் கொண்டவர்கள் தேசிய முன்னனில் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அப்பாவி மக்களை இவர்களின் இஷ்டத்திற்கு அழைத்து எவ்வகையிலும் விசாரணை நடத்த முடியும் என்ற தன்மூப்பான செயல் கண்டனத்துக்குரியவை. சட்டத்தை மீறுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதும், சட்டத்தை மதிப்பவர்களுக்கு சமாதிதான் கதி என்பது வழக்கம் ஆகிவிட்டது.

அண்மையில் போலீஸ் கவாலில் உயிரிழந்த குகன் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைய விசாரணைக்கு பிறகு உயிரிழந்த தியொ பெங் ஹோக் மரணம் சற்று குழப்பத்தையும் சம்பதப்பட்டவர்களின் மீது கோபத்தையும் தூண்டயுள்ளது. மக்கள் எதிர்ப்பார்க்கும் சுயேச்சை அரச விசாரணை வழி இதற்க்கு தீர்வு காண அரசாங்கம் உடனடி முடிவெடுக்கவேண்டும். கந்தகக் குழப்பமாக இருந்துவரும் மக்கள் எரிமலையாக சினத்தில் சிதறும் சூழ்நிலை எழுவதற்குள் அரசாங்கம் நேர்மையான முறையில் இந்த இரு மரண விஷயத்தை தீர்வுக்கானவேண்டும்.

போலீஸ் உடையிலும் அதிகார போர்வையிலும் காட்டுமிராண்டிதனமாக நடந்த அனைவரும் தப்பிவிடாமல் விசாரணை நேர்மையான முறையில் அமையவேண்டும்.

ஒருவர் விசாரணைக்கு அழைத்து சென்ற பிறகு உயிரிழக்க நேரிட்ட பல மரண விசாரணை இன்னும் முழுமை அடையாமல் இருக்கும் தருணத்தில் அந்த இலாக்காவை சேர்ந்த இயக்குனர்கள் இடைகால பதவி நீக்கம் செய்வது அவசியமாகும். ஆனால் இந்நாட்டில் அது சாத்தியமாகாமல் இருப்பது தேசிய முன்னணியின் முட்டாள்தனத்தை குறிக்கிறது.

இது போன்ற சம்பவங்கள் நாட்டையே தலைகுனிய வைத்து விட்டன. இந்நாட்டில் மனிதாபிமானம் கடும் சோதனையை சந்திக்கிறது. மனித உரிமைகளை போலீஸ் மற்றும் இலஞ்ச ஊழல் போன்ற கருப்பு ஆடுகளே மேய்ந்தால், யாரிடம் முறையிடுவது? "மனித உரிமைகளை காப்பதில் மிகுந்த பொறுமை காட்டவேண்டும்" என்று ஒரே மலேசியா கொள்கையில் இல்லையா?

இப்பிரச்சனைக்கு முடிவு காணும் வகையில் தேசிய முன்னணி அரசாங்கம் இதனை தொடர்ந்து, இதுவரைக்கும் காவலில் உயிரிழந்த அனைத்து சம்பவங்களுக்கும் விசாரணை செய்து அதனை பற்றி எல்லா முடிவினைகளையும் நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அதற்க்கு முதல் படியாக, குகன் மற்றும் தியொ பெங் ஹோக் மரணங்கள் குறித்த அரச விசாரணை குழு அமைப்பதற்கு முன்பு, அதில் பங்கேற்கும் அனைத்து இயக்குனர்களின் பெயர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் முடிவு செய்யவேண்டும். இல்லையேல் அந்த விசாரணையிலும் நேர்மையும் ஜனநாயகமும் கண்ணீர் வடிக்கும் சூழ்நிலை தொடர்கதை என்பது உண்மையாகிவிடும்.

நன்றி : சுகுமாரன் பெரியசாமி

No comments: