Sunday, August 8, 2010

மாநகராட்சியின் ஈப்போ 2020 மாதிரி திட்டம் குறித்து கலந்துரையாடல்கடந்த வெள்ளிக்கிழமை (06/08/10) ஈப்போ பாராட் நாடாளுமன்ற அலுவலகத்தில் நடந்த சந்திப்பு கூட்டத்தில், மாநகராட்சியின் ஈப்போ 2020 மேம்பாட்டு திட்டம் குறிந்தும் பொதுமக்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாக்டர் ஜெயபாலன் (ஜ.செ.க ஈப்போ பாராட் செயலாளர்) மற்றும் பெ.சுகுமரானும் (மு.குலசேகரனின் அரசியல் செயலாளர்) வந்திருந்த பொதுமக்களுடன் ஒரு சில கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

சுமார் 20 கும் மேற்பட்டவர்கள் இந்த முதல் நிலை சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பல முக்கியமான மேம்பாட்டு திட்டங்கள் குறித்த ஆலோசனை பொது மக்களிடமிருந்து பெறபட்டது. அவை பின்வருமாறு:

1 . வாளர் கோர்ட் மற்றும் சுங்கை பாரி மாநகராட்சி குடியிருப்பு கட்டிடங்கள் அனைத்தையும் புதுப்பித்தலோ அல்லது மறு வடிவ கட்டிடத்தை அமைதல் வேண்டும். இவ்விரு குடியிருப்பு கட்டிடங்களும் 60 -ம் ஆண்டில் கட்டப்பட்டு இன்று மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. பெரும்பகுதி வீடுகள் காலியாகவும் குடியிருப்புக்கு தோதாகவும் இல்லை. இந்த இரு குடியிருப்பு பகுதிகள் மருவடிம் பெற்றவுடன், இங்கிருக்கும் வீடுகளை இங்கேயே குடியிருந்த மக்களுக்கே குறைந்த விலையில் விற்கப்படுதல் வேண்டும். மீதம் உள்ள வீடுகளை தேவைப்படுபவர்களுக்கு வாடகைக்கு வழங்குதல் வேண்டும்.
அன்றைய காலங்களில் இரவு நேரங்களில் மிகவும் பொழிவுடன் காணப்பட்ட ஈப்போ பழைய நகரம், தற்சமயம் களையிழந்து தோற்றமளிக்கிறது. ஈப்போ மாநகரத்தை மீண்டும் பொழிவு பெற, பல இன மக்களை ஈப்போ பழைய நகரத்தில் மாநகராட்சி மீண்டும் குடிருப்பு வசதிகளை செய்ய திட்டமிடுதல் வேண்டும். இதன் வழி ஈப்போ பழைய நகரம் மீண்டும் வளர்ச்சியை அடையும் சாத்தியம் உள்ளது.

2 . பல வருடங்களாக ஈப்போ பழைய நகரத்தில் வியாபாரம் மிகவும் வேதனை தரும் அளவிற்கு பாதிப்பு அடைந்துள்ளது. இதற்க்கு முதல் காரணமாக விளங்குவது கார் நிறுத்துமிட வசதியின்மை. கடந்த காலங்களில் சுமார் 60 கும் மேற்பட்ட கார் நிறுத்துமிட வசதி ஈப்போ கிந்தா ஆற்றுக்கு அருகாமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அனால் 2004ம் ஆண்டில் அந்த இடம் "மக்கள் பூங்கா" வாக மாற்றம் கண்டது. மேலும் இந்த ஈப்போ பழைய நகரத்தில் வணிக வளாகம் வர்த்தகரீதியாக வளர்ச்சி காண, ஈப்போ திடலின் ஒரு பகுதியை வாகன நிறுத்துமிட வளாக கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி மன்றம் உறுதிசெய்தல் வேண்டும். அவை அடுக்குமாடி வசதி கொண்ட கட்டிடமாகவோ அல்லது பூமிக்கு அடியில் கார் நிருந்துமிட வசதி கொண்டவையா இருத்தல் வேண்டும். இந்த சலுகையை நிறைவேற்ற ஈப்போ மாநகராட்சி மறு ஆய்வு செய்தல் வேண்டும்.

3. ஈப்போ மாநகராட்சி மன்றத்திற்கு உட்பட்ட சிறிய நகருக்கும் ஈப்போ நகருக்கும் விரைவு தொடர்வண்டி சேவை மிக விரைவில் அமலாக்கம் காணவேண்டும் என்பதனை பலர் ஆலோசனை தெரிவித்தனர். அவை பிரிட்டிஷ் நாட்டு அமைப்பு முறை படி பூமிக்கு அடியில் இயங்கும் தொடர்வண்டி திட்டம் போல அமைத்தல் வேண்டும். ஈப்போ மாநகராட்சி திட்டமிடுதல் படி பொது வாகன சேவை மையமாக மேருவில் அமைக்க விவரம் குறிப்பிடப்படுள்ளது. ஆனால் அவை பொது மக்களுக்கு வசதியற்ற நிலையை உருவாக்கும் என்ற எண்ணத்தினால், அந்த விரைவு தொடர்வண்டி மற்றும் பேருந்து மைய வளாகம் ஈப்போ நகரதுக்குல்லேயே அமைத்தல் தகுதியான திட்டம் என்று ஆலோசனை கூறப்பட்டது. அது மட்டும் மின்றி மாநகராட்சிமன்ற திட்டத்தில் விரவு தொடர்வண்டி சேவை புந்தோங், பெர்சாம், ஈப்போ கார்டன் , சீமோர் மற்றும் தம்புன் போன்ற இடங்கள் விடுபட்டுள்ளதால், இச்சேவையை குறிப்பிடப்பட்ட இடங்களிலும் வழங்க திட்டமிடுதல் வேண்டும் என்ற ஆலோசனை கூறப்பட்டது.

ஈப்போ 2020 மாதிரி திட்டமிடல் மிகவும் நுட்பமான சூழ்நிலையில் அமைவதனால் கூடிய விரைவில் இந்த திட்டம் குறிந்து நகர்புற மேம்பாட்டு துறையில் நிபுணத்துவம் பெற்ற நபர்களை கண்டு ஆலோசனை பெறப்படும் என்ற விவரத்தையும் இந்த கூட்டத்தில் மு.குலசேகரன் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இது சம்பத்தமாக, மாநகாராட்சி மன்ற தலைவருடன் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்ய கோரி கடிதம் ஒன்று கூடிய விரைவில் அனுப்பப்படும். அதே சமயத்தில், இத் திட்டம் குறிந்து பொது மக்களின் கருத்தை பெற வழங்கிய அவகாச நாள் ஆகஸ்ட் 28 - ம் முடிவுத்திகதியாக இருக்கும் பட்சத்தில் அவை மேலும் ஒரு மாத காலக்கெடு நீடித்தல் வேண்டும் என்பதனை அந்த கடிதம் வழி மாநகராட்சி மன்ற தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்படும் என்று மு.குலசேகரன் தெரிவித்தார்.

1 comment:

Funny pictures said...

It is very good information. Thanks for sharing.