Saturday, August 22, 2009

மனித மிருகங்கள்

மாலை 6 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. உடனே என் மனைவியை அழைத்துக் கொண்டு அந்த தனித்து வாழும் தாயை சந்தித்தேன். அப்பொழுது மணி இரவு 8.

அவருக்கு 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை. அதில் ஒருவர் மனநலம் குறைந்தவர். மூன்று பெண் குழந்தைகளும் கல்வியில் சிறந்தவர்கள். ஆனால் அவர்களின் வாழ்கையில் துன்பத்தை தவிர வேற எதுவும் கிடையாது.

அவரின் 2 பெண்குழந்தைகளை 3 தடவை வாலிப இந்திய இளைஞர்கள் மானபங்கம் செய்ய முயற்சி செய்தார்கள் என்ற செய்தியை கேட்டவுடன் எனக்கு வார்த்தையில்லை சொல்வதற்கு.

அந்த தாய் பிறரிடம் சொல்ல முடியாமல் தவிப்பதும், தவிப்பவர்களின் கண்ணில் தெரியும் பயமும் என்னால் உணரமுடிகிறது.

அந்த தாய் கூறிய ஒவ்வொரு விஷயமும் என்னால் இன்னமும் மறக்கமுடியவில்லை. அவரின் கையில் 100 வெளியை கொடுத்துவிட்டு மேலும் பல உதவிகளை செய்ய சிந்தித்துக் கொண்டுயிருக்கிறேன்.

அரக்க குணம் கொண்ட மனித மிருகங்களை பற்றி சிந்திக்கும் பொழுது நான் வெட்கப்படுகிறேன். எதற்கு நான் மனிதனாக பிறந்தேன் என்று.

No comments: